தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியன் வங்கி ஊழியருக்கு கரோனா: அச்சத்தில் மக்கள் - mannargudi indian bank closed

திருவாரூர்: மன்னார்குடியில் இந்தியன் வங்கி ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதியில் உள்ள இரண்டு இந்தியன் வங்கி கிளைகளும் மூடப்பட்டுள்ளன.

mannargudi indian bank closed as staff tests corona positive
mannargudi indian bank closed as staff tests corona positive

By

Published : Jul 2, 2020, 1:45 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54ஆக உள்ளது. இந்நிலையில் இன்று (ஜுலை 2) மன்னார்குடியில் செயல்பட்டுவரும் இந்தியன் வங்கிக் கிளையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

இதனால் வங்கிகளுக்குச் செல்லும் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து மன்னார்குடியில் செயல்பட்டுவரும் இரண்டு இந்தியன் வங்கி கிளைகளும் மூடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், திருவாரூரில் பெட்ரோல் நிலையத்தில் (பங்க்) வேலை பார்க்கும் இரண்டு ஊழியர்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், விளமல் பகுதியில் இயங்கி வந்த பெட்ரோல் பங்கும் முடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க... பரமகுடி அதிமுக எம்எல்ஏ-வுக்கு கரோனா உறுதி

ABOUT THE AUTHOR

...view details