திருவாரூர்: கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள பைங்காட்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜாய்ஸ்(40), இவர் மன்னார்குடி அசேஷம் ஊராட்சியில் வசித்து வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுக்காவில் உள்ள செய்யாறு கிராமத்தில் பெற்றோரை இழந்து தனது பாட்டியுடன் வாழும் எட்டாம் வகுப்பு மாணவன் ஜெயசூர்யா, ஏழாம் வகுப்பு மாணவன் டெண்டுல்கர் ஆகியோரின் ஏழ்மை நிலையை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசிரியர் ஜாஸ் தனியார் தொலைக்காட்சியில் பார்த்துள்ளார்.
ஏழை மாணவர்களுக்கு உதவிய அரசு பள்ளி ஆசிரியர் அதனைக் கண்டு நெகிழ்ந்த அவர், இந்தாண்டு பொங்கலை அந்த மாணவர்களுடன் கொண்டாடி விட்டு, மாணவர்களின் கல்வி செலவை முழுமையாக ஏற்று கொள்வதாக தெரிவித்துள்ளார். பின்னர் ஆசிரியை ஜாய்ஸின் மகள்களான மித்ரா, இனியா ஆகியோர், தங்களது உண்டியலில் சேமித்து வைத்த ரூ.5 ஆயிரம் ரொக்க பணத்தை அந்த மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
அதனை தொடர்ந்து மனிதநேயமிக்க செயல் புரிந்தமைக்காக ஆசிரியை ஜாய்ஸ் அவரது குடும்பத்தினருக்கு, பைங்காட்டூர் பள்ளி ஆசிரியர்கள், கிராமத்தினர் ஒன்றினைந்து கேக் வெட்டி, மரக்கன்றுகள் நட்டு ஆசிரியர் செய்த செயலுக்கு நன்றி தெரிவித்தார்கள். அப்போது அந்த மாணவர்களின் கல்வி செலவிற்கு முதற்கட்டமாக ரூ. 10 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கிய ஆசிரியை, அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க சொன்னார்.
இதையும் படிங்க: திருப்பூரில் 4 நாள்களாக போக்குக் காட்டிய சிறுத்தை பிடிபட்டது!