திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பள்ளி விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவிக்கு கரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.
மன்னார்குடி அரசுப்பள்ளி மாணவிகளுக்கு கரோனா தொற்று! - மன்னார்குடி அரசுப்பள்ளி மாணவிகளுக்கு கரோனா
திருவாரூர்: மன்னார்குடியில் அரசுப் பள்ளி மாணவிகள் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து மாணவிகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
mannargudi government school
இதனைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பள்ளியில் உள்ள 12ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 5 மாணவிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மாணவிகளின் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு, பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து அறிவிக்கப்படும் என தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.