தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்! - paddy packs are all damaged

திருவாரூர் : திருமகோட்டை கிராமத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 40 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.

அரசு கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்...!
அரசு கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்...!

By

Published : Sep 30, 2020, 5:33 PM IST

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்துள்ள திருமகோட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், பெருமாள்கோவில், நத்தம், மேலநத்தம், மகாராஜபுரம், ஆதிகோட்டை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து பம்புசெட் மூலம் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை செய்யப்பட்ட சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை, கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொட்டி வைத்திருந்தனர்.

ஆனால், விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை எடுத்துச் செல்ல லாரி வராததால், அதிக அளவிலான நெல் கொள்முதல் நிலையத்தில் தேக்கமடைந்தது. அது மட்டுமின்றி, அலுவலர்கள் அலட்சியம் காட்டியதால் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக நெல்லை பல இடங்களில் விவசாயிகள் கொட்டி வைத்துக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்றைய தினம் (செப். 29) பெய்த கன மழையால் திறந்தவெளியில் எடை போடாமல் கொட்டப்பட்டிருந்த 40 ஆயிரத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் நனைந்து சேதமாயின. இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். மேலும் இச்சூழலில் அரசு விரைந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க...அரியர் தேர்வுகள் ரத்து: அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details