திருவாரூர்: Hanuman Jayanthi: மன்னார்குடி - ஆலங்குடி குரு ஸ்தலம் அருகே திருவோணமங்கலம் கிராமத்தில் ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானத்தின் ஞானபுரீ சித்திரகூட சேத்திரம் ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் சுவாமி கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வலதுபுறம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரும், இடதுபுறம் ஸ்ரீ கோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணர், ஆஞ்சநேயர் சுவாமியும் எழுந்தருளியுள்ளனர்.
உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் 33 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமி இடுப்பில் நோய் மற்றும் சங்கடங்களை நிவர்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகை உடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சங்கடம் தீர்க்கும் ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயர் சுவாமி தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் சங்கடங்களை நீக்கி மங்கலம் அருள்பவராக இங்கு எழுந்தருளியுள்ளார். இத்தகைய சிறப்புமிக்க கோயிலில் மார்கழி அமாவாசை மூல நட்சத்திரம் கூடிய ஜனவரி 2ஆம் நாளான இன்று அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.