தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயிர் காப்பீடு மோசடி: விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் - விவசாயிகள் கண்டன ஆர்பாட்டம்

திருவாரூர்: மன்னார்குடி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்காமல் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்ட அலுவலர்களைக் கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
protest

By

Published : Nov 12, 2020, 5:56 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராயபுரம், கீழப்பட்டு கிராமத்தில் விவசாயிகள் 2019-2020ஆம் ஆண்டிற்கான பயிர்காப்பீடு செய்துள்ளனர். பல்வேறு இயற்கைப் பேரிடர் காரணங்களால் பயிர் மகசூல் இழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குப் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி ராயபுரத்தில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலர்களைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "ராயபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர், அலுவலர்கள் ஆதரவாளர்களைத் தனது வசம் வைத்துகொண்டு போலியான சிட்டா, அடங்கல் தயார் செய்து பொது இடங்கள், அரசு மருத்துவமனை இடம், கோயில் இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை விவசாய நிலம் என போலி ஆவணங்கள் தயார் செய்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை பெற்றுள்ளனர்.

இதனால் உண்மையாகப் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பிட்டு தொகை கிடைக்கவில்லை. எனவே தமிழ்நாடு அரசு உரிய விசாரணை மேற்கொண்டு மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக் கவேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டிற்கான இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details