தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் - இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி

திருவாரூர்: மத்திய - மாநில அரசுகள் தாலிக்கு தங்கம் இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சியினர்
கம்யூனிஸ்ட் கட்சியினர்

By

Published : Sep 3, 2020, 5:28 PM IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (செப்டம்பர் 3) மாநிலம் தழுவிய விழிப்புணர்வு பரப்புரை, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் கிராமத்தில் துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சிவபுண்ணியம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோட்டூர் கடைவீதிகளில் வியாபாரிகளிடம் துண்டுபிரசுரங்களை வழங்கினர். கடந்த 5 மாதங்களாக ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள தமிழ்நாட்டு மக்களுக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் 7 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

விவசாயிகளின் வங்கிக் கடன், கூட்டுறவு கடன்களை, முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்ட நாளை 200 நாட்களாக அதிகரித்து நாள் ஒன்றுக்கு 600 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.

ஊரடங்கு நேரத்திலும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதால் அடித்தட்டு, நடுத்தர மக்கள் திருமணம் உள்ளிட்ட விழாக்களை நடத்த முடியாமல் இருக்கின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மத்திய - மாநில அரசுகள் தாலிக்கு தங்கம் இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் வழங்கினர்.

ABOUT THE AUTHOR

...view details