திருவாரூர் மாவட்டம் மன்னர்குடி நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சியைக் கண்டித்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - ஒப்பந்த தொழிலாளர்கள்
திருவாரூர்: கரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த சிறப்பு ஊதியத்தை வழங்க மறுக்கும் மன்னார்குடி நகராட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
municipal
இதில் கரோனா காலத்தில் பணியாற்றிய நகராட்சி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குத் தமிழ்நாடு அரசு அறிவித்த சிறப்பு ஊதியத்தை வழங்க மறுக்கும் மன்னார்குடி நகராட்சிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்தப் போராட்டத்தில் நகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஒப்பந்தத் தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.