திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (24). தனியார் மருந்தகம் ஒன்றில் பணியாற்றி வரும் இவர், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நான்கரை வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி மறைவான பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
நான்கரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது - திருவாரூர் மாவட்டச் செய்திகள்
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே நான்கரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பின்னர் அங்கு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியைத் தேடி அங்கு வந்த சிறுமியின் தாயார், தினேஷ் குமார் செய்கையைக் கண்டு அதிர்ச்சியடைந்து அங்கிருந்து சிறுமியை மீட்டுச் சென்றார். அதன்பின், சிறுமியின் தாயார் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினேஷ் குமார் மீது புகார் அளித்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதையும் படிங்க:7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை