திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (35). இவர் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால், அந்தப் பெண் ஐந்து மாதம் கர்ப்பமாக உள்ளார். இதையறிந்த, அப்பெண்ணின் பெற்றோர் தங்களது பெண்ணை திருமணம் செய்துகொள்ளுமாறு ராஜேஷிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.