கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள லாரிகள் நிறுத்தப்படும் இடத்தில் நேற்று காலை முதல் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினர். நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் உணவு பொருட்களை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் லாரிகள் மூலம் கொண்டு செல்ல டோக்கன்கள் வழங்கும் பணி நடந்துள்ளது.
உணவு பொருட்களை ஏற்றி செல்ல டோக்கன் - ஊரடங்கை மீறி ஒரே இடத்தில் குவிந்த லாரி ஓட்டுநர்கள்! - thiruvarur corona news
திருவாரூர்: டோக்கன்களை பெற ஊரடங்கு உத்தரவை மீறி பொது இடத்தில் ஒன்றுக்கூடிய லாரி ஓட்டுநர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

token
ஊரடங்கை மீறி ஒரே இடத்தில் குவிந்த லாரி ஓட்டுநர்கள்
இதை பெறுவதற்காக சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொது இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியதால் பெரும் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க:வேலைவாய்ப்பை இழந்த தொழிலாளர்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேறும் அவலம் - நடவடிக்கை எடுக்குமா அரசு?