திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கொல்லுமாங்குடி-காரைக்கால் பிரதான சாலையில் திருக்கொட்டாரம் என்ற இடத்தில் காவல் உதவி ஆய்வாளர் திருக்குமரன் தலைமையிலான சிறப்புக் காவல்படையினர் நள்ளிரவு இரண்டு மணிக்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நடத்திய வாகன சோதனையில் சந்தேகத்திற்கிடமாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர்.
அப்போது, காருக்குள் புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலிருந்து கடத்திவரப்பட்ட மூன்றாயிரத்து 250 சாராய பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. சோதனையின்போது காரில் வந்த இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர்.