திருச்சி மலைக்கோட்டை சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரியின் பின்புற சுவரை துளையிட்டு கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளை திருடிர்கள் அள்ளிச் சென்றுள்ளனர். திருடப்பட்ட சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறை சார்பில் தனிப்படை அமைத்து திருடிர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சீரா தோப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ், மடப்புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்களை கண்டவுடன் தப்பியோட முயற்சித்துள்ளனர்.
இதில் சுரேஷ் என்பவர் தப்பியோடிய நிலையில், மணிகண்டனை காவலர் சுற்றி வளைத்தனர். பின்னர் அவரிடம் இருந்த பையை சோதனையிட்டதில் 4.5 கிலோ தங்க நகை இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நகைகள் திருச்சி லலிதா ஜுவல்லரியில் திருடப்பட்ட நகையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரை கைது செய்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து திருவாரூர் நகர காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
லலிதா நகைகடையில் கொள்ளையடிக்கப்பட்டதாக ஒருவர் கைது தப்பியோடிய சுரேஷின் உறவினர் முருகன் அகில இந்திய அளவில் வங்கி கொள்ளைகளில் தொடர்புடையவர் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க:லலிதா ஜுவல்லரியில் ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை - நடந்தது என்ன?