மத்திய அரசின் ‘ஜல் சக்தி அபியான்’ நீர் மேலாண்மை திட்டத்திற்கான ஆய்வுக் கூட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில்இன்றுநடைபெற்றது. அப்போது, மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலான விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தொடங்கி வைத்தார்.
மழை நீர் சேகரிப்பு குறித்து ஏரி, குளங்கள் ஆய்வு! - ஏரி குளங்கள்
திருவள்ளூர்: மழை நீர் சேகரிப்பு குறித்து திருத்தணி ஒன்றியத்தில் உள்ள ஏரி, குளங்களை மத்திய நீர் மேலாண்மை குழுவினர் ஆய்வு செய்தனர்.
மத்திய நீர்
இதனைத்தொடர்ந்து திருத்தணி ஒன்றியத்தில் உள்ள சிறுகனூர், பட்டாபிராமப்புரம், திருவாலங்காடு, கே.கே.சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பாரம்பரிய ஏரிகள், குளங்கள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது நீர் இல்லாமல் வறண்ட பாலைவனமாக காட்சியளிக்கும் ஏரிகள், குளங்களை சீரமைத்து அதில் நீரைத் தேக்கி வைப்பது குறித்து அலுலர்களுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது.