தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொத்தடிமைகளாக இருந்தவர்கள் பாதுகாப்பு கேட்டு மனு - திருவாரூரில் கொத்தடிமைகள்

திருவாரூர்: கொத்தடிமைகளாக மூன்று வருடங்களாக பணி புரிந்த பிறகும் தொடர்ந்து வேலைக்கு வர வேண்டுமென குடும்பத்தினரை மிரட்டியதால் பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரையிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர்.

manu
manu

By

Published : Dec 23, 2019, 10:17 PM IST

திருவாரூர் மாவட்டம் பரவக்கோட்டை பகுதியில் தோப்பு தெருவில் ஜோதி பாசு என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். குடும்ப வறுமை காரணமாக தனது மகன் வெங்கடேஷை அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரிடம் வேலைக்கு அனுப்பியுள்ளார். ராஜசேகர் தன்னிடம் வேலை பார்ப்பதற்கு வாய்வழி ஒப்பந்தமாக மூன்று வருடங்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் பணத்தை வழங்கியுள்ளார்.

தற்போது மூன்று வருடங்கள் கடந்த நிலையில் தனது மகனைத் தொடர்ந்து வேலைக்கு வருமாறு ராஜசேகர் துன்புறுத்துவதாகவும், தனது மகன் தற்கொலைக்கு முயலும் வகையில் வேலை நேரத்தில் அடித்து துன்புறுத்தியுள்ளதாகவும் அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் தற்போதுதான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் மனு

இந்நிலையில் இரவு நேரங்களில் பணிக்கு வரவேண்டும் எனவும் இல்லை என்றால் தனது பணத்தை திருப்பித் தருமாறு தனது குடும்பத்தை ராஜசேகர் மிரட்டி வருகிறார். இதுகுறித்து பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தனது மகனுக்கும் தனது குடும்பத்திற்கும் சரியான பாதுகாப்பு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரையிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details