தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூர் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்த சிறப்பு அலுவலர் - special officer rajesh lakhani

திருவாரூர்: குடவாசல் பகுதியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை சிறப்பு அலுவலர் ராஜேஷ் லக்கானி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

rajesh-lakhani-inspection
rajesh-lakhani-inspection

By

Published : May 26, 2020, 11:40 AM IST

தமிழ்நாடு முழுவதும் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளுக்காக நடப்பாண்டில் சுமார் ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதைத்தொடர்ந்து அப்பணிகளைக் கண்காணிக்க சிறப்பு அலுவலராக ராஜேஷ் லக்கானியை தமிழ்நாடு அரசு நியமித்தது.

இந்நிலையில் அவர், திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதிகளில் நடைபெற்றுவரும் குடிமராமத்து பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதையடுத்து கோண வாய்க்கால், கொரடாச்சேரி வெட்டாறு ஆகிய பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட உள்ளதால் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், பொதுப்பணித்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:கமுதியில் குடிமராமத்துப் பணி தொடக்கம் - ராமநாதபுரம் ஆட்சியர் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details