தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிமராமத்து பணிகளுக்காக மக்களிடம் கருத்து கேட்ட ஆட்சியர்!

திருவாரூர்: நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகள் தொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், பாசனத்தார சங்க பிரதிநிதிகளிடம் கலந்துரையாடினார்.

குடிமராமத்து பணிகள்

By

Published : Jul 4, 2019, 6:03 PM IST

தமிழகத்தில் நீராதாரங்களை பாதுகாக்கும் வகையில் திருவாரூர் மாவட்டம் குழித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டக்குடி கிராமத்தில் ஒப்பந்ததாரர்கள் அல்லாமல் விவசாயிகளை மட்டுமே கொண்டு பாசனதாரர்கள் சங்கம் அமைத்து குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. எனவே இதில் திருவாரூர் மாவட்டத்தில் நீர்வள ஆதார துறையின் மூலமாக 95 பணிகளை ரூ.16 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளபடும் என திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே தாங்களே தங்கள் இடங்களில் குடிமராமத்து பணிகளை செய்ய உதவுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர்

இந்த குடிமராமத்து பணிகளில் விவசாயிகள் பாசனதாரர் சங்கம் அமைத்து ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால் ஆகியவற்றை தூர்வாறுதல் பழுதடைந்த கட்டுமானங்களை சீரமைத்தல் போன்றவை குடிமராமத்து பணிகளாக மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இப்பணியில் விவசாயிகள் சிலர் தங்களை இணைத்துக் கொண்டனர்.

மாவட்ட ஆட்சியரருடன் பொதுமக்கள் கலந்துரையாடல்.

அதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் குடிநீர் தொட்டிகள் சரிவர சுத்தம் செய்யப்படவில்லை எனவும், தெரு விளக்குகள் சரிவர எரியவில்லை எனவும் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் ஒரு வாரத்தில் இவைகள் சரி செய்யப்படும் என உறுதியளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details