திருவாரூர் மாவட்டம் குடவாசலில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ளது, அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இங்கு கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்தது.
இதில் எதிர்பாராத விதமாக பள்ளி வகுப்பறையின் மேல் மாடிக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. பள்ளிக்கு விடுமுறை என்பதால் அந்தக் கட்டடத்தின் உள்ளே யாரும் இல்லை.
இந்தப் பள்ளி கட்டடமானது கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்புதான் கட்டப்பட்டது என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். தற்போது கரோனா காரணமாக பள்ளிகள் இயங்காததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
தொடர் மழையால் இடிந்து விழுந்த பள்ளிக் கட்டடம் இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் மற்றும் அரசு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க: தனியார் பள்ளிக்கு முறைகேடாக தடையில்லா சான்றிதழ் வழங்கியவர் மீது வழக்கு தொடர நீதிமன்றம் உத்தரவு!