தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூட்டிய வீட்டில் கொள்ளை: 220 சவரன் நகைகள், ரூ.7 லட்சம் ரொக்கம் அபேஸ்

திருவாரூர்: கூத்தாநல்லூர் அருகே அத்திக்கடையில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டிலிருந்து 220 சவரன் தங்க நகைகளும், ரூ.7 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் அத்திக்கடை கொள்ளை திருவாரூர் அத்திக்கடை கொள்ளை thiruvarur thiruvarur athikadai theft 200 saverign gold theft athikadai
thiruvarur athikadai theft

By

Published : Jun 15, 2020, 12:40 PM IST

Updated : Jun 15, 2020, 5:02 PM IST

திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையைச் சேர்ந்தவர் கொ. சர்புதீன் (34). இவர் நேற்று தனது வீட்டை பூட்டிவிட்டு அத்திக்கடையில் உள்ள மற்றொரு தெருவில் வசிக்கும் தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். பின்னர், நேற்று மாலை மீண்டும் வந்து பார்த்தபோது வீட்டுக் கதவின் பூட்டு, பீரோக்களின் கதவுகள் உள்ளிட்டவை உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, கொரடாச்சேரி காவல் துறையினருக்கு சர்புதீன் கொடுத்த தகவலின் பேரில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பீரோவில் இருந்த 220 சவரன் தங்க நகைகள், ரூ. 7 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை, சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொரடாச்சேரி காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துவருகின்றனர்.

மேலும், சர்புதீன் வீட்டிற்கு எதிரே கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் கட்டடத்துக்கு வந்து செல்லும் தொழிலாளர்கள் உள்பட அப்பகுதியிலுள்ள அனைவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளைபோன 220 சவரன் தங்க நகைகள், தனது மனைவி மற்றும் சகோதரிகள் ஆகியோரது நகைகள் என்றும், ஏழு லட்சம் ரூபாய் ரொக்கம் வீடு கட்டுவதற்காக வைத்திருந்ததாகவும் சர்புதீன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், இந்தத் திருட்டில் வெளியூர் நபர்கள் ஈடுபட வாய்ப்புகள் குறைவு என்றும், உள்ளூர் நபர்களே இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கக் கூடும் எனவும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இதனால், அத்திக்கடை பகுதி முழுவதும் காவல் துறையினரின் தீவிர கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. திருவாரூர் டிஎஸ்பி தினேஷ் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: சொகுசு கார்.. 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள்.. இது என்னடா ராஜமாதாவுக்கு வந்த சோதனை!

Last Updated : Jun 15, 2020, 5:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details