மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் அரசியல் கட்சியினரும் மாணவர்களும் இந்த திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை பெசன்ட் நகரில் கோலம் போட்டு மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தற்கு, அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்ததனர். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் தங்களின் வீடுகளில் கோலம் வரைந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.