திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளுர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜான் கென்னடி. இவரது மகன் ஜான் ஜோ ஆகாஷ் (21) தன்னுடன் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை மக்கள் தொடர்பியல் படித்துவரும் கேரளா கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த மெல்வின் கிரேஸ் ஆண்டனி (23), அனுவிந் (23) ஆகியோரை விடுமுறை காரணமாக வீட்டிற்கு அழைத்து வந்தார். பின்னர் நண்பர்கள் அனைவரும் அருகேயுள்ள பிடாரி குளத்திற்குக் குளிக்கச் சென்றுள்ளனர்.
குளத்தில் மூழ்கி கேரள மாணவர் உயிரிழப்பு: திருத்துறைப்பூண்டியில் பரிதாபம் - குளத்தில் மூழ்கி கேரள மாணவர் பலி
திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் நண்பர்களுடன் குளத்தில் குளிக்கச் சென்ற கேரள மாணவர் நீரில் முழ்கி இறந்ததையடுத்து திருத்துறைப்பூண்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதில் மெல்வின் கிரேஸ் ஆண்டனிக்கு நீச்சல் தெரியும் என்பதால் குளத்தில் குளித்துள்ளார். திடீரென குளித்துக் கொண்டிருந்த மெல்வினை காணாததால் ஜான் ஜோ ஆகாஷ், திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் நீரில் காணாமல்போன மெல்வின் கிரேஸ் ஆண்டனியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேர தேடுதலுக்குப் பின் இறந்த நிலையில் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஃபோர்ப்ஸின் 30 வயதுக்குள் டாப் 30 இந்தியர்கள் பட்டியலில் 'சாய் பல்லவி'