தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில்வே பாலத்தில் தேங்கும் மழைநீர்.. மக்கள் சாலை மறியல் ! - Keelakoothangudi pepole protest

திருவாரூர்: கீழகூத்தங்குடி கிராமத்திற்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்குவதால் அருகில் உள்ள கிராமத்திற்குச் செல்ல முடியவில்லையெனக் கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Keelakoothangudi people protest

By

Published : Sep 25, 2019, 9:24 PM IST

கூடூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழகூத்தங்குடி கிராமத்திற்கு செல்லும் வழியில் ரயில்வே கீழ் பாலம் அமைக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. பயன்பாட்டுக்கு வந்த சில நாட்களிலேயே அருகில் இருந்த காட்டாற்றில் இருந்த நீர் பாலத்தின் உள்ளே புகுந்தது.

இதனை வருவாய்துறையினரும்,ரயில்வே துறையினரும் இணைந்து பாலத்தில் புகந்த நீரை வெளியேற்றி காட்டாற்றில் இருந்து நீர்புகும் பாதையை அடைத்தனர். இந்தச்சூழலில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக கீழ் பாலத்தில் மீண்டும் தண்ணீர் தேங்கியுள்ளது.

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

இதனால், பாலத்தைக்கடந்து அந்தப்பக்கம் உள்ள கிராமத்திற்கு செல்ல முடியாத நிலையால் கோபமடைந்து பொதுமக்கள், இளைஞர்கள் திடீரென பாலம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த சாலை மறியலால் திருத்துறைப்பூண்டி சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: பல கோடி மதிப்புள்ள 700 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details