தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேட்பாளர்கள் ஜோதிடம் பார்ப்பதை தேர்தல் செலவில் சேர்க்க வேண்டும் - கி. வீரமணி - thiruvarur

திருவாரூர்: தமிழக முதலமைச்சரை மக்கள் வெறுப்போடு பார்ப்பதன் விளைவாகவே அவர் தேர்தல் பிரசாரத்தை ஒத்திவைத்துள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சனம் செய்துள்ளார்.

கி. வீரமணி

By

Published : Mar 26, 2019, 12:02 PM IST

திருவாரூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்திற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது,

தேர்தல் ஆணையம் பல நேரங்களில் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக ஒரு ஐயப்பாடு உள்ளது. இதை தேர்தல் ஆணையம் தவிர்க்கவேண்டும்.

கி. வீரமணி செய்தியாளர் சந்திப்பு
வேட்பாளர்கள் சிலர் ஜோதிடம் பார்த்தும், யாகம் நடத்தியும் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.தேர்தல் ஆணையம் இதையெல்லாம் அவர்களது செலவு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாமா? என்று கேள்வி எழுப்பினார்.மேலும் தேர்தல் ஆணையத்தின் ராஜ்ஜியம் மூன்று மாதத்திற்கு மட்டுமே, அதற்காக கட்சி கொடிக்கம்பத்தை அகற்றுவது என்பது தேவையற்ற ஒன்று. தமிழக முதலமைச்சரை மக்கள் வெறுப்போடு பார்ப்பதன் காரணமாகவே அவர் தேர்தல் பிரசாரத்தை ஒத்தி வைத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


ABOUT THE AUTHOR

...view details