தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘டெல்லியில் தமிழகம் நல்ல விலைக்கு அடகு வைக்கப்படவில்லை’ - கி.வீரமணி - thiruvarur

திருவாரூர்: பாஜகவால் நோட்டா உடன் போட்டியிட்டு வெற்றி பெற முடியாததால் தான் தற்போது கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றனர் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சனம் செய்துள்ளார்.

கி. வீரமணி

By

Published : Mar 27, 2019, 10:21 AM IST

Updated : Mar 27, 2019, 11:52 AM IST

திருவாரூர் பனகல் சாலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திருவாரூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் பூண்டி கலைவாணன் மற்றும் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் செல்வராசு ஆகியோரை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது,

தமிழ்நாட்டை டெல்லியில் சிலர் அடகு வைத்து விட்டார்கள், அடகு வைத்தவர்கள் நல்ல விலைக்கு கூட அடகு வைக்கவில்லை. இதனால் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியால் மட்டுமே தற்போது அடகு வைத்துள்ள தமிழகத்தை மீட்க முடியும்.

இதுவரை பாஜக தமிழகத்தில் நோட்டா உடன் மட்டுமே போட்டியிட்டதே தவிர, வேறு எந்த கட்சியுடனும் போட்டியிட்டது இல்லை. இதில் நோட்டா வெற்றிப் பெற்று விடுகிறது என்பதால் இந்த முறையாவது நோட்டா வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவே அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated : Mar 27, 2019, 11:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details