திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் பாஜகவின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் வருகின்ற 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் ஆதரவு இல்லாமல் எந்த ஒரு கட்சியும் வெற்றி பெற முடியாது என்கின்ற நிலை தற்போது உருவாகியுள்ளது
கந்த சஷ்டி கவசம் விவகாரம் தொடர்பான கறுப்பர் கூட்டம் என்கின்ற யூடியூப் சேனல் கடுமையாக விமர்சனம் செய்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் உட்பட பல்வேறு கட்சியினர் பல கடவுள்களை பற்றி விமர்சனம் செய்த போதெல்லாம் இந்த அளவிற்கு எதிர்ப்பு எழுந்தது
இல்லையானால் தற்போது விமர்சனம் செய்பவர்கள் அச்சமடையும் வகையில் எதிர்ப்புகள் கட்சி பாகுபாடின்றி எழுந்துள்ளன.கடவுளை விமர்சனம் செய்யும் அரசியல் கட்சியினரின் தற்போது தங்கள் நிலைப்பாட்டிலிருந்து மாறியுள்ளனர்.
இச்சம்பவம் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட நிகழ்வு கந்தசஷ்டி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.
இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை குண்டர் சட்டம் அல்லது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மேலும், பேசிய அவர் "இட ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்துவிட்டதாக வரும் தகவல்கள் தவறானது யாருக்கெல்லாம் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற ரீதியில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. நிச்சயமாக ஓபிசி மக்களுக்கு உரிய உரிமைகளை வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்" எனக் கூறினார்.