தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காரைக்குடி - திருவாரூர் ரயில் சேவை விரைவில் தொடக்கம் - திருச்சி கோட்ட மேலாளர் அஜய்குமார்

திருவள்ளூர்: காரைக்குடி - திருவாரூர் ரயில் சேவை மிக விரைவில் தொடங்க உள்ளதாக திருச்சி கோட்ட மேலாளர் அஜய்குமார் தெரிவித்தார்.

TRAIN

By

Published : May 22, 2019, 7:14 PM IST

திருவாரூர் ரயில் நிலைய சந்திப்பு தேவைகள் குறித்து திருச்சி மண்டல மேலாளர் அஜய்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, நுகர்வோர் அமைப்பினர், ரயில் பயணிகள் சங்கத்தினர் திருவாரூர் ரயில் நிலையத்தில் பல்வேறு தேவை குறித்த மனுக்களை அவரிடம் அளித்தனர்.

காரைக்குடி-திருவாரூர் ரயில் சேவை மிக விரைவில் தொடக்கம்

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திருவாரூர் திருச்சி வழி பயணிகள் ரயில் சேவை குறித்து வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, விரைவில் அதிகாலை, இரவில் திருச்சியில் இருந்து திருவாரூருக்கு ரயில் இயக்கப்படும். பயணிகள் பாதுகாப்புக்காக திருவாரூர் ரயில் நிலையத்தில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படும். காரைக்குடி வழியாக திருவாரூர் ரயில் பாதை பணிகள் முடிவடைந்ததால் மிக விரைவில் அந்த வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கப்படும்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details