தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காரைக்காலில் பயங்கரம்; பாமக மாவட்ட செயலாளர் வெட்டிக் கொலை!

காரைக்கால் அருகே பாமக மாவட்ட செயலாளரை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டிக் படுகொலை செய்துள்ளனர்.

pmk leader  karaikal pmk leader murder  murder  murder news  District Secretary  pmk District Secretary murder  karaikal pmk District Secretary murder  கொலை  கொலை வழக்கு  பாமக மாவட்ட செயலாளர்  பாமக மாவட்ட செயலாளர் கொலை  பாமக
மாவட்ட செயலாளர்

By

Published : Oct 23, 2021, 11:24 AM IST

காரைக்கால் மாவட்டத்தில், நீண்டகாலமாக பாமக மாவட்ட செயலாளராக இருந்தவர் தேவமணி (53). இவர் நேற்றிரவு (அக்.22) கட்சி அலுவலகத்திலிருந்து, தனது இரு சக்கர வாகனத்தில் கட்சி ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத சில நபர்கள், திடீரென அவரது வாகனத்தை வழிமறித்து, தேவமணியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளனர்.

பாமக மாவட்ட செயலாளருக்கு அரிவாள் வெட்டு

இதையடுத்து அவருடைய கட்சி ஆதரவாளர்கள், நண்பர்கள் அவரை மீட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தேவமணி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பாமக தொண்டர்கள், நிர்வாகிகள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருநள்ளாறு காவல் துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அடையாளம் தெரியாத நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சாப்பாட்டில் விஷம்.. துடிதுடித்த கணவன்.. மனைவி மீது புகார்!

ABOUT THE AUTHOR

...view details