தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கந்தன்குடி சுப்ரமணியசுவாமி ஆலய குடமுழுக்கு விழா - Kandankudi Subramaniaswamy Temple

திருவாரூர்: கந்தன்குடி சுப்ரமணியசுவாமி ஆலய குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கந்தன்குடி அருள்மிகு சுப்ரமணியசுவாமி ஆலய குடமுழுக்கு விழா
கந்தன்குடி அருள்மிகு சுப்ரமணியசுவாமி ஆலய குடமுழுக்கு விழா

By

Published : Jan 28, 2021, 1:16 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கந்தன்குடியில் அம்பன், அம்பரன் என்ற இரு அசுரர்களை வதம் செய்வதற்காக அன்னை பராசக்தி காளிரூபம் எடுத்து வந்தபோது, தன்னுடன் வந்த குழந்தை கந்தன் இங்கு தங்கியிருந்ததால் பின்னாளில் கந்தன்குடி என்ற பெயரை கொண்டு வரலாற்று சிறப்பு மிக்க மிக பழமையான முருகன் தளமாகவும் விளங்குகிறது.

கந்தன்குடி அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியசுவாமி கோயிலின் குடமுழுக்கு விழா 6 கால யாகசாலை பூஜைகளுடன் தொடங்கி பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்கள் குடங்களில் நிரப்பப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சுப்மணிய சுவாமி போன்ற சுவாமிகளை ஆவகரணம் செய்து மங்கள இசை வாசிக்கப்பட்டது.

பின்னர், சிவாச்சாரியார்கள் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட யாகசாலையிலிருந்து ஆலயம் வலம் வந்து அருள்மிகு சுப்ரமணிய சாமி, வள்ளி தேவசேனா போன்ற விமான கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த குட முழுக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள் - அச்சத்தில் வாழும் மக்கள்

ABOUT THE AUTHOR

...view details