திருவாரூர்:நன்னிலம் அருகே கமுகக்குடி கிராம பஞ்சாயத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆக்கட்டான் குளம் உள்ளது. இக்குளத்தின் நீரை பல ஆண்டுகளாக விவசாய பாசனத்திற்காக அக்கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சில தனிநபர்கள் குளத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி குடியேறியதால், அதன் பரப்பளவு குறைந்து நீர் இருப்பும் குறையத்தொடங்கியது. இதுதொடர்பாக பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டாட்சியர் அலுவலகத்திலும் புகார் அளித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.