திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் 18 வயதிற்குட்பட்ட தமிழ்நாடு மாநில அளவிலான ஜூனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நான்கு நாள்கள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளுக்கான தொடக்கவிழா இன்று நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் நடைபெறும் இப்போட்டிகளில், நாகை, திருப்பூர், சிவகங்கை, மதுரை உட்பட தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து 60 அணிகள் கலந்துகொள்கின்றன.