திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பின்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். இவர் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இந்நிலையில், இவரது மகன் விஸ்வநாதன் கடந்த 2016ஆம் ஆண்டு தனது தந்தையின் சொத்து தொடர்பாக திருத்துறைப்பூண்டி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கில் ஆஜராகாத வட்டாட்சியருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்த நீதிபதி! - வழக்கு சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜர் ஆகாத வட்டாட்சியருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்
திருவாரூர்: சொத்து தொடர்பான வழக்கில் சாட்சி சொல்ல பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத மன்னார்குடி வட்டாட்சியருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து திருத்துறைப்பூண்டி உரிமையியல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதே சொத்து தொடர்பாக அண்ணன் செல்வராஜும் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக மன்னார்குடி வட்டாட்சியருக்கு சொத்து தொடர்பாக சாட்சியமளிக்க பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் குடியிருப்பு, அலுவலகம் ஆகிய இடங்களில் சம்மன் ஒட்டியும் நேரில் ஆஜராகாமல் நீதிமன்ற அவமதிப்பு செய்வதாக வழக்கறிஞர் ராஜவேலு மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று உரிமையியல் நீதிபதி ராஜேஷ்கண்ணா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மன்னார்குடி வட்டாட்சியரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணைக்கு சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜர் ஆகாத வட்டாட்சியருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வருவாய்த் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.