டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் கடந்த 5ஆம் தேதி மாலை அடையாளம் தெரியாத நபர்கள் விடுதிக்குள் புகுந்து அங்கிருந்த மாணவர்களை ஆயுதங்களால், கடுமையாகத் தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் மாணவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
ஜேஎன்யு மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம்! அதன் ஒரு பகுதியாக திருவாரூர் அரசு கலைக்கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்லூரி வளாகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய அரசைக் கண்டித்தும், ஜேஎன்யு சங்க நிர்வாகிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க...அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாதிகளாக அறிவித்த ஈரான்!