திருவாரூர்: திருவாரூர் முழுவதும் இந்தாண்டு சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்திச் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் குறிப்பாக நன்னிலம் வலங்கைமான், குடவாசல், பேரளம், கொல்லுமாங்குடி உள்ளிட்டப் பல்வேறு இடங்களில் மாவு பூச்சிகளின் நோய்த் தாக்குதல் அதிகரித்துக் கொண்டே வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
மேலும், மாவு பூச்சி நோய்த்தாக்குதலால் பருத்திச்செடியின் தண்டுகள் வெள்ளை நிறத்தில் காட்சியளிப்பதாலும் இலைகள் பழுப்பு நிறத்தில் மாறிவருவதாலும் மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.