தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டப்பகலில் கொள்ளையர்கள் துணிகரம்: தங்க நகை, கார ் திருட்டு - திருட்டு சம்பவம்

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே வீட்டின் முன்பக்க கதவை உடைத்து 13 சரவன் தங்க நகை, காரை திருடிச் சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.

13 sovereign, car theft

By

Published : Aug 1, 2019, 1:36 PM IST

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆப்பரகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (43). இவர் பொன்னிரை அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுமதியும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலையில் இருவரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டனர். இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 13சரவன் தங்க நகை, வெளியில் நின்றிருந்த கார் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனர். இதையடுத்து மாலையில் பள்ளி முடிந்து இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்பு உள்ளே சென்று பார்த்தப்போது பீரோவில் இருந்த 13சவரன் தங்கநகை, வெளியில் நின்றிருந்த கார் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் அலிவலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து கைரேகை நிபுணர்களுடன் வந்த காவல்துறையினர் தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் தங்க நகை, கார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details