திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வம் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அதிமுக திருவாரூர் மாவட்ட கழகச் செயலாளரும், உணவுத் துறை அமைச்சருமான காமராஜ், அதிமுக-பாமக-தேமுதிக கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பரப்புரையின்போது பேசிய ஓபிஎஸ், திமுக-காங்கிரஸ் இடையேயான கூட்டணி அதர்மத்தின் கூட்டணி என்று விமர்சித்தார். 2023ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு, தமிழ்நாடு குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.
திமுகவினர் எந்த உணவகத்தில் சாப்பிட்டாலும் காசு கொடுக்காமல் அடிதடியில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டிய ஓபிஎஸ், ஆனால்அதிமுக தொண்டர்கள், அமைச்சர்கள்எங்காவது கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பார்த்ததுண்டா? என்று கேள்வி எழுப்பினார்.
2023-ம் ஆண்டுக்குள் தமிழகம் குடிசை இல்லா மாநிலமாகும் -ஓபிஎஸ்!