திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநகராட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் போது மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, முதலமைச்சரை சந்தித்து மனுவளிக்க சென்றார். இந்நிலையில் அவர் கரோனா பரிசோதனை செய்யப்படாததால் அவரை வெளியில் தடுத்து நிறுத்தி, அரை மணி நேர வாக்குவாதத்திற்கு பிறகு முதலமைச்சரை சந்திக்க அனுமதி கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் முதலமைச்சரை சந்தித்த டி.ஆர்.பி. ராஜா, மன்னார்குடி வளர்ச்சிப்பணிகள் குறித்த கோரிக்கை மனுவை அளித்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயர் பொருந்திய கல்வெட்டில் பெயர் மறைக்கப்பட்டு வைத்துள்ளதாக முதலமைச்சரிடம் கேட்டபோது அது தூய்மைப் பணிகள் நடைபெறுவதற்காக மறைத்து வைத்திருக்கின்றனர் என கூறினார்.
மேலும் மன்னார்குடி பாதாள சாக்கடை திட்டம், நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம் சரி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு விதை நெல் வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சரிடம் முன்வைத்தேன். இது சம்மந்தமாக கூடிய விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, முதலமைச்சரிடம் மனுவளிக்க சென்ற போது, கரோனா பரிசோதனை செய்யப்படாததால் வெளியில் தடுத்து நிறுத்தி அரை மணி நேர வாக்குவாதத்திற்கு பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர் என்று குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க:திருமண பேனரில் நித்தியானந்தாவை கண்டென்ட் ஆக்கிய மாப்பிள்ளைத் தோழர்கள் - விருந்தினர்கள் அதிர்ச்சி!