தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது வழக்குப்பதிவு! - Trivarur

திருவாரூர்: ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக திருவாரூர் மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 450 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

PROTEST

By

Published : Jun 2, 2019, 11:56 AM IST

மத்திய அரசு கொண்டுவரும் திட்டத்தை, பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. உடன் இணைந்து தனியார் நிறுவனமான வேதாந்தத்தையும் கூட்டு சேர்த்து செயல்படுத்தப் போவதாக அறிவித்ததில் இருந்து டெல்டா மாவட்டங்களில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றுவருகிறது.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்று தொடர் முழக்கப் போராட்டம் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உட்பட திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் நடைபெற்றது.

ஹைட்ரோகார்பன்-விவசாயிகள்மீது வழக்குப்பதிவு

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 450-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details