திருவாரூர் மாவட்டம் கீழ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அழகுசுந்தரம் (28). இவரது மனைவி சரண்யா (25). இவர்களுக்குத் திருமணமாகி ஆறு மாதங்கள் ஆன நிலையில் இருவரும் தங்களுடைய இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டுக்கு நன்னிலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது நீலக்குடி அருகேயுள்ள மத்தியப் பல்கலைக்கழகம் அருகே வேகமாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது.
இதில், அழகுசுந்தரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சரண்யாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் அழகுசுந்தரத்தின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.