தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் - ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு போராட்டம்

திருவாரூர்: குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பினர் நேற்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

human chain protest  human chain protest against caa nrc npr in thiruvarur  திருவாரூர் மனிதச் சங்கிலி போராட்டம்  மனிதச் சங்கிலி போராட்டம்  ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு போராட்டம்  mannar kudi human chain protest
மனிதச் சங்கிலி போராட்டம்

By

Published : Jan 31, 2020, 7:43 AM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நேற்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் இஸ்லாமியர்கள், பொதுமக்கள், சிறுவர்கள், சிறுமிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

மன்னார்குடியில் மனித சங்கிலி போராட்டம்

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மன்னார்குடி தேரடியிலிருந்து பெரியார் சிலை வரை நீண்ட வரிசையில் கைகளைக் கோர்த்து நின்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 40 கிமீ தூர மனித சங்கிலி!

ABOUT THE AUTHOR

...view details