திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வீரமணி - பத்மாவதி தம்பதி. இவர்களுக்கு ஆறுவயதில் பெண்பிள்ளை ஒன்று உள்ளது. இந்நிலையில் தம்பதிகளுக்கு இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் பத்மாவதி கோபித்துக் கொண்டு திருச்சிக்கு சென்றுள்ளார்.
இதையறியாத வீரமணி திருவாரூர் தாலுகா காவல்நிலையத்தில் மனைவியை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பத்மாவதியை தேடிவந்தனர். கணவர் காவல்துறையினர் தேடுவதை அறிந்த பத்மாவதி, வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவருடன் தாலுகா காவல் நிலையத்தில் நேற்று ஆஜரானார். அப்போது அங்கிருந்த வீரமணிக்கும் அவரது மனைவி பத்மாவதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.