திருவாரூரில் நகர் பகுதியான விஷ்ணு தோப்பு பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்குப் பின்புறம் சுடுகாடு உள்ள நிலையில் இன்று சவ ஊர்வலத்தின் போது சிலர் வெடி வெடித்து சென்றனர். இதில், அருகில் உள்ள கூரை பற்றியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டுக்குப் பரவத்தொடங்கியது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததில் மூன்றுக்கும் மேற்பட்ட தீ அணைப்பு வாகனங்களைக் கொண்டு, இரண்டு மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.