தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூரை வீடுகளில் தீ விபத்து: 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதம் - இரண்டு கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்து சாம்பல்

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே இரண்டு கூரை வீடுகள் தீப்பிடித்ததில் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

house-fire-house-fire
house-fire-house-fire

By

Published : Mar 1, 2020, 11:06 PM IST

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த அதிரெங்கம் புதுத்தெரு அருகே உள்ள ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் அய்சா பீவி. இவரது கூரை வீட்டில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. காற்று வேகம் காரணமாக அருகில் இருந்த ஷாஹிரா என்பவரது வீட்டிற்கும் தீ பரவியது. உடனடியாக தீ விபத்து குறித்து திருத்துறைப்பூண்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தும் ஆற்றங்கரை பகுதிக்கு உள்ளே பாதை சரியாக இல்லாததால் வாகனம் உள்ளே சென்று தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்களே தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்தில் சேதமடைந்த வீடு

ஆனால் இரண்டு கூரை வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதில் வீட்டிலிருந்த மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து சேதமானது. மின்கசிவு காரணமா, வேறு ஏதேனும் காரணமா என திருத்துறைப்பூண்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சிஏஏ போராட்டத்தில் பங்கேற்ற போலாந்து மாணவருக்கு நோட்டீஸ்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details