தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், தொற்றுப் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முன்களப் பணியாளரான தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
நன்னிலம் பேரூராட்சி பகுதிகளில் தினமும் சுண்ணாம்பு பவுடர், கிருமி நாசினி தெளிக்கும் பணி வடிகால் கழிவு நீரை அகற்றும் பணி போன்ற பல்வேறு பணிகளில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நன்னிலம் அருகே உள்ள சன்னாநல்லூரில் முன்களப் பணியாளர்களான தூய்மை பணியாளர்களின் பணிகளைப் பாராட்டும் வகையில், வர்த்தகர்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு மாலை, சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.
தூய்மைப் பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை! பின்னர், அவர்களுக்கு தேவையான அரிசி மளிகை பொருட்கள், காய்கறிகள், வேஷ்டி, சேலை, பிரட் முககவசம் உள்ளிட்டவைகளுடன் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி கெளரவித்தனர்.
இதையும் படிங்க: என் தாயின் வலி பிறருக்கு வரக்கூடாது: ஆக்ஸிஜன் ஆட்டோ மூலம் உதவும் பெண்!