திருவாரூர்:கடந்த நான்கு நாள்களாகப் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாகப் பல்வேறு இடங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இதில் குறிப்பாக திருவாரூர் அருகே உள்ள பழவனக்குடி, மடப்புரம், பேட்டை, பாலூர், பூர்த்தாங்குடி, ஆண்டிப்பந்தல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகள் முழுவதும் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் வடியாமல் சூழ்ந்துள்ளது.
இதனால் குழந்தைகள், வயதானவர்களை வைத்துக்கொண்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளதாக பொதுமக்கள்வேதனை தெரிவிக்கின்றனர்.