தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 24, 2020, 7:59 PM IST

ETV Bharat / state

சுகாதாரத் துறை திடீர் ஆய்வு -  பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்!

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் வணிக நிறுவனங்களில் நடத்தப்பட்ட சுகாதாரத் துறை ஆய்வில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

தமிழ்நாடு அரசு ஒருமுறை பயன்படுத்தித் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்துள்ளது. இதையடுத்து, வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கிறதா என்று அவ்வப்போது சுகாதாரத் துறை ஆய்வு மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில், திருவாரூரில் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா என்று சுகாதாரத் துறை ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களில் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

இந்த ஆய்வில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.50 ஆயிரம் அபதாரம் விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: அதிமுக பிரமுகர் வீட்டில் மூட்டை மூட்டையாக வேட்டி சேலைகள் பறிமுதல்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details