திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது ஒரு சில பகுதிகளில் குறுவை அறுவடை பணிகள் முடிந்துள்ளன.
குறிப்பாக திருவாரூர், தப்பளாம்புலியூர், காட்டூர், மடப்புரம், இளவங்கார்குடி, பெரும்புகலூர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளுக்கு அறுவடை செய்வதற்காக திருவாரூர் வேளாண் பொறியியல் துறை மூலம் அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால் தற்போது மாவட்டம் முழுவதும் இரண்டு கிளாஸ் அறுவடை இயந்திரம், மூன்று டயர் அறுவடை இயந்திரங்கள் என ஐந்து மட்டுமே உள்ளன. இதனால் விவசாயிகள் வேளாண் பொறியியல் துறையில் விண்ணப்பித்தாலும் உரிய நேரத்திற்கு இயந்திரங்கள் கிடைக்கவில்லை என குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.