தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டொளி வீசி பறக்கும் பச்சைக்கொடி - வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - Shop closure protest in Mannargudi

திருவாரூர்: வேளாண் சட்டங்களை எதிர்த்து பச்சைக் கொடி கட்டி கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

மன்னார்குடியில் பச்சை கொடி கட்டி கடையடைப்பு போராட்டம்
மன்னார்குடியில் பச்சை கொடி கட்டி கடையடைப்பு போராட்டம்

By

Published : Dec 8, 2020, 5:58 PM IST

டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக தெரிவித்து வணிகர் சங்கத்தினர் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளின் முன்பு பச்சை கொடி கட்டி கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆனால் வழக்கம்போல் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.

ABOUT THE AUTHOR

...view details