தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - திருவாரூர் ஆட்சியர் அலுவலகம்

திருவாரூர்: அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Thiruvarur district news
Thiruvarur collector office

By

Published : Jun 5, 2020, 4:05 AM IST

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், உள்ளாட்சி மற்றும் பொது சுகாதாரம் உள்ளிட்ட அமைப்புகளில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டதை கைவிட வேண்டும்.

பணி நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கக் கூடாது. தமிழக தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

தொகுப்பூதியம் ,சிறப்பு காலமுறை ஊதியம், ஒப்பந்த முறையில் பணிபுரியும் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.

அண்மையில் அறிவித்த பொருளாதார தொகுப்பு ஏழைகளுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும். உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் 50-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details