பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நிலவும் அச்சத்தை போக்கும் வகையில் "தேர்வுக்கு பயம் ஏன்?" என்ற நிகழ்ச்சி டெல்லி தல்கோத்ரா உள்விளையாட்டு அரங்கில் கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் உள்பட நாடு முழுவதுமிலிருந்து 2,400 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டிலிருந்து பேர் கலந்துகொண்டனர். இதில் அரசுப் பள்ளியிலிருந்து கலந்துகொண்ட ஒரே மாணவி என்ற பெருமையைத் தட்டிச் சென்றுள்ளார் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் கமுககுடி கிராமத்தைச் சேர்ந்த தமிழரசனின் மகள் ஆராதனா.