திருவாரூர் மாவட்டம் குடவாசலில் இலவச மருத்துவ முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், குணமடைந்து வீடுகளுக்குத் திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இறப்பு சதவிகிதம் மிகக் குறைவாக உள்ளது. சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக கரோனா வைரஸ் தொற்று குறைந்துகொண்டே வருகிறது.
தமிழ்நாட்டில் ரேசன் அரிசி இலவசமாக கொடுக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு கொடுத்த நபர் ஒன்றுக்கு ஐந்து கிலோ இலவச அரிசியும் சேர்த்து நவம்பர் மாதம் வரை கூடுதலாக அரிசி வழங்கப்படும்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நபிகள் நாயகம் போன்ற அரசியல், ஆன்மிகத் தலைவர்களை இழிவுபடுத்தும் செயலில் ஈடுபட்ட நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு மக்களைக் கூறுபோட நினைப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.